Limited Exam: Agriculture Instructor Grade III - Northern Province 2021 


வடக்கு மாகாண பொதுச்சேவையின் விவசாய போதனாசிரியர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுபப்டுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமைகள்:-

கல்விப் பொதுத் தராதரப் (சாதாரண தர) பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அத்துடன்

தொழில்சார் தகைமைகள் :-

1. குண்டசாலை, அக்குனகொலபிலெஸஸ், பெல்வெகெர, பிபிலை, லபுதுவ, வாரியப்பொல, வவுனியா,

அநுராதபுரம், கறபின்ச ஆகிய விவசாயக் கல்லூரிகளிலொன்றில் இரண்டு (02) வருட விவசாய டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

அம்பாறை ஹாடி தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் தொழில்நுட்ப விவசாயத்தில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

அக்குவைனாஸ் (Aquinas) கல்லூரியில்இரண்டு (02) வருட விவசாய டிப்ளோமா பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

2. உயர்கல்வி அமைச்சு மற்றும் மேற்படி தொழில்நுட்பச் சான்றிதழ்களை வழங்குகின்ற நிறுவனங்களின் கருத்துக்களை அறிந்துகொண்டதன்பின் தேவை ஏற்படின் மேற்படி தொழில்நுட்பத் தகைமைகளுககு; எல்லா வகையிலும் சமமானது என மூன்றாம்நிலைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது தொழில்நுட்பத் தகைமைகள். 

அல்லது

3. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பின்வருவனவற்றில் பெற்றுக் கொண்ட இளமாணிப் பட்டம் ஏதாவது ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.

அ. விவசாய விஞ்ஞானப் பட்டதாரி [B.Sc (Agriculture)]

ஆ. விவசாய தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ விஞ்ஞான பட்டதாரி [B.Sc (Agriculture Technology and Management)]

இ. ஏற்றுமதி விவசாய விஞ்ஞானப் பட்டதாரி [B.Sc (Export Agriculture)]

ஈ. பனைஇனத்தாவர மற்றும் இறப்பர் தொழில்நுட்ப விஞ்ஞான பட்டதாரி [B.Sc (Palm and Latex Technology)]

பரீட்சைக் கட்டணம் - 500 ரூபாய்கள்

போட்டிப்பரீட்சைகள்
1. உளச்சார்புப் பரீட்சை
2. தொழில்நுட்ப ஆய்வுப் பரீட்சை

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
“செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்,
இல:393/48,
கோவில் வீதி
நல்லூர்
யாழ்ப்பாணம்