Open Exam: Management Assistant Non Technical - Department of Government Factory - 2020 (2021) 

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாரா - வகுதி 2 அலுவலர் தொகுதியைச் சேர்ந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020 (2021) க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பதவிகள்

01. வேலைத்தள உதவியாளர் - WORKSHOP ASSISTANT

(04 வெற்றிடங்கள்)

02. வேலைத்தள இலிகிதர் - WORKSHOP CLERK

(02 வெற்றிடங்கள்)

03. நேர இலிகிதர் - TIMEKEEPER CLERK

(04 வெற்றிடங்கள்)

.கல்வித் தகைமைகள் :

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) ப் பரீட்சையில் ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேனும் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர) சித்தியடைந்திருத்தல்.

மற்றும்

சிங்களம்/ தமிழ்/ ஆங்கில மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக மேலும் இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) ப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.


தொழில்சார் தகைமைகள் :

கணினிப் பிரயோகம்/ தட்டச்சு பற்றிய தொழில் மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட, 03 மாதங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கான பாடநெறியை கற்றிருத்தல்

வயதெல்லை : 18-30

போட்டிப்பரீட்சைகள்
1. மொழித் தேர்ச்சியும், புரிந்துணர்வும்
2 நுண்ணறிவுப் பரீட்சை


பரீட்சைக் கட்டணம்.- ரூபா 750.00 ஆகும்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
"Commissioner-General of Examinations,
(Institutional and Foreign Examinations Branch),
Department of Examinations,
PO. 1503,
Colombo