Police Constable (Male) - Sri Lanka Police

இலங்கை பொலிஸ் கொஸ்தாபதல் (ஆண்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

சம்பள அளவுத்திட்டம் - Rs. 29,540 -7x300 - 27x270 - Rs. 41,630

கொடுப்பனவுகள்
  • (அ)வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு : ரூபா 7,800.00
  • (ஆ) பொ.நி.சு. இல. 03/2016 இற்கு அமைய அடிப்படைச் சம்பளத்தில் 40% கொடுப்பனவாக குறிப்பிடப்பட்ட பதவிக்கு வழங்கப்படும் ரூபா 11,816.00
  • (இ) இடைக்கால கொடுப்பனவு : ரூபா 2,500.00
  • (ஈ) கடினக் கொடுப்பனவுகள் : ரூபா 2,000.00 ,
  • (உ) சீருடைகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூபா 250.00
  • (ஊ) இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 10,500.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்கும் பிரதேசங்கள்)
  • (ஊ) இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 9,800.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்காத பிரதேசங்கள்)

இந்தக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக :

(அ) இலவச போக்குவரத்து வசதிகள்
(ஆ) உத்தியோகத்தர்களுக்கு இலவச மருத்துவ வசதி (வெளிநாடுகளிலும் வைத்திய சிகிச்சைகளைப் பெறுவதற்கு நிதிமூலமான உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு) பண உதவிகள் வழங்கப்படும்
(இ) சகல சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும்
(ஈ) விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகள்
(உ) கடமைகளுக்கான பிரயாணச் செலவுகளுடன், கடினமான வேலைகளுக்காகவும் அத்துடன் திறமையான கடமைகளைச் செய்வதற்காகவும் வெகுமதிகளாகப் பணம் வழங்கப்படும்.

தேவையான அடிப்படைத் தகைமைகள் :

(அ) வயதெல்லை.- வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18-25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

(ஆ) கல்வித் தகைமைகள்.-

Having passed 06 subjects with 04 credit passes including a credit pass for the medium language at G. C. E. (O/L) examination at one and the same sitting. And the applicant should have passed the subject, Mathematics in not more than two sittings. 

(இ) உடற் தகைமைகள் :

1.  உயரம் : 05 அடி 04 அங்குலம் (ஆகக் குறைந்தது)
2. மார்பு : 30 அங்குலம் (ஆகக் குறைந்தது மூச்சுவிட்ட நிலையில்)

Police Constable (Male) - Sri Lanka Police பதவி தொடர்பான விபரங்களுக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ள ஆங்கில வர்த்தமானியைப் பார்வையிடுங்கள். தமிழில் வெளியானது மீள பதிவேற்றம் செய்யப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director/Recruitment, 
Police Recruitment Division,
 No. 375, 
First Floor, 
Sri Sambuddhathva Jayanthi Mawatha, 
Colombo 06