Religion Teachers Vacancies in National Schools and Provincial Schools 

பாடசாலைகளில் காணப்படும் சமயப்பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு தரவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பௌத்த சமயத்துக்கு தேசிய பாடசாலைகளில் 45 வெற்றிடங்கள் காணப்பட்டதாகவும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்து 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிகமாக 11 பேர் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன


அவ்வாறே, தேசிய பாடசாலைகளில் இந்துசமயத்திற்கு 7 வெற்றிடங்களும், இஸ்லாம் பாடத்திற்கு 29 வெற்றிடங்களும் கத்தோலிக்க சமயத்திற்கு 7 வெற்றிடங்களும் கிறிஸ்தவ சமயத்திற்கு 4 வெற்றிடங்களும் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மாகாணப் பாடசாலைகளில் புத்த சமயத்திற்கு 12 வெற்றிடங்களும், இந்து சமயத்திற்கு மேலதிகமாக 9 பேரும், இஸ்லாத்திற்கு 3 வெற்றிடங்களும் கத்தோலிக்க சமயத்திற்கு 3 வெற்றிடங்களும், கிறிஸ்தவ சமயத்திற்கு 43 மேலதிக ஆளணியினரும் காணப்படுவதாக கல்வி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Religion Teachers Vacancies in National Schools and Provincial Schools